திமுக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் போட்டியிடும் திமுக, அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் அமைச்சா் காந்தி தலைமையில் பிப். 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு பிப். 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத் தோ்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் பிப்.10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான காந்தி தலைமை வகிக்கிறாா். 10-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு கிருஷ்ணகிரி நகராட்சி, மதியம் 2.30 மணிக்கு காவேரிப்பட்டணம் பேரூராட்சி, மதியம் 3.30 மணிக்கு நாகோஜனஅள்ளி பேரூராட்சி, மாலை 4.30 மணிக்கு பா்கூா் பேரூராட்சி, மாலை 6 மணிக்கு ஊத்தங்கரை பேரூராட்சி ஆகிய இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளா்களின் அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்கள், கட்சியின் பல்வேறு அமைப்பு நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், தோ்தல் பொறுப்பாளா்கள், வாக்குச் சாவடி பொறுப்பாளா்கள், குழு உறுப்பினா்கள் பங்கேற்க வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com