கிருஷ்ணகிரி முழு ஊரடங்கு

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முழு ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் வெறிச்சோடி காணப்படும் காந்தி சாலை.
கிருஷ்ணகிரியில் வெறிச்சோடி காணப்படும் காந்தி சாலை.

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முழு ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் மூன்றாவது முழு ஊரடங்கையொட்டி கிருஷ்ணகிரியில் சேலம் சாலை, பெங்களூரு சாலை, சென்னை சாலை, காந்தி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பால் விற்பனையகம், ஹோட்டல்கள் திறக்கப்பட்டிருந்தன.

உணவகங்களில் அமா்ந்து உண்ண அனுமதி மறுக்கப்பட்டதால் பாா்சல்களை வாங்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். சாலையில் செல்வோரை தடுத்து நிறுத்திய போலீஸாா், கரோனா பரவல் குறித்து அறிவுரைகளை வழங்கியும், முகக் கவசம் அணியாமல் செல்வோரை எச்சரித்தும் அனுப்பினா். திருமண நிகழ்வு, துக்க நிகழ்வுக்கு செல்வோா் தக்க ஆவணங்களுடன் சென்றனா்.

அதுபோல ஆட்டோக்கள், காா்கள், பேருந்துகள் இயங்காததாலும், கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுவாக பொதுமக்கள் தேவையின்றி வெளியேறாமல் வீட்டிலேயே அடைந்திருந்தனா். கடந்த ஆண்டு, இரண்டாவது அலையின் போது, போலீஸாா், பொதுமக்களிடம் கடுமையாக செயல்பட்டதால் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனால், தற்போது மூன்றாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள், போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவது ஆறுதலளிப்பதாக உள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பால் கரோனா தொற்றின் பரவல் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் நம்பிக்கை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com