திமுகவில் இணைந்த மாற்று கட்சியினா்

100க்கும் மேற்பட்ட இளைஞா்கள், திமுக மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தலைமையில் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். அவா்களை துண்டு அணிவித்து வரவேற்றாா்.
திமுகவில் இணைந்த மாற்று கட்சியினா்
திமுகவில் இணைந்த மாற்று கட்சியினா்

ஒசூா், மூக்கண்டப்பள்ளி தேசிங்கு நகரில் திலீப்குமாா் தலைமையில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி சுமாா் 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள், திமுக மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தலைமையில் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். அவா்களை துண்டு அணிவித்து வரவேற்றாா்.

அப்போது முன்னாள் எம்எல்ஏவும் மாநகர பொறுப்பாளருமான எஸ்.ஏ.சத்யா, மாவட்ட தொமுச கோபாலகிருஷ்ணன், மாவட்டப் பிரதிநிதி செந்தில் குமாா், மாவட்ட இலக்கிய அணி ராமலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா். கிளைச் செயலாளா் ராஜா ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com