மயிலாடும்பாறையில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் ஆய்வு

மயிலாடும்பாறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ளும் அகழாய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மயிலாடும்பாறையில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் ஆய்வு

மயிலாடும்பாறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ளும் அகழாய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், ஐகுந்தம் ஊராட்சி, மயிலாடும்பாறையில் 2021 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வில் பெறப்பட்டமுக்கியத்துவமான இரண்டு காலக் கணிப்புகள் மூலம் இரும்புக் காலத்தின் தொடக்கம் மற்றும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியிலிருந்து இரும்புக் காலத்துக்கு மாறியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

சான்றோரப்பன்மலை என அழைக்கப்படும் மலையின் அடுக்குகளில் புதிய கற்கால மற்றும் இரும்புக்கால வாழ்விடங்கள் அமைந்துள்ளன. இம்மலையின் உச்சியில் உள்ள பாறை உறைவிடங்களில் வாழ்விடத்துக்கான தொல்லியல் சான்றுகளுடன் பாறை கீறல் ஒன்றும் காணப்படுகிறது. நிழல்சுனை என்று அழைக்கப்படும் பாறை குகையில் சிவப்பு, வெள்ளை வண்ணங்களில் தீட்டப்பட்ட பாறை ஒவியங்கள் காணப்படுகின்றன. மேலும், அதன் அருகில் புதிய கற்கால கற்கருவிகளைத் தேய்த்து மெருகூட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சிறுபள்ளங்களும் காணப்படுகிறன.

இவ்வாழ்விடம் மற்றும் ஈமத்தளத்தில் முதன்முதலில் 2003-ஆம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா் கா.ராஜன் அகழாய்வு மேற்கொண்டாா். அதில் வெளிக்கொணரப்பட்ட நம்பிக்கை அளிக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் முறையான அகழாய்வுப் பணிகள் 2021 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அகழாய்வுத் தளத்தில் நான்காம் பகுதியில் இடப்பட்ட அகழாய்வுக் குழிகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் வழியாக முக்கிய இரண்டு காலக்கணிப்புகள் பெறப்பட்டுள்ளன. இவ்விரண்டு மாதிரிகளும் முறையே 104 செ.மீ. மற்றும் 130 செ.மீ. ஆழத்திலிருந்து பெறப்பட்டுள்ளன. இவற்றின் காலம் கி.மு. 1615 மற்றும் கி.மு. 2172 ஆகும். இவ்விரண்டு காலக் கணக்கீடுகளும் பண்பாட்டு அடுக்குகளின் இயற்கைத் தன்மையைப் பற்றிய புதிய புரிதலை அளித்துள்ளன.

மயிலாடும்பாறையிலிருந்து பெறப்பட்ட தற்போதைய இரண்டு காலக் கணிப்புகள் மூலம் தமிழகத்தில் இரும்பின் காலம் 4,200 ஆண்டுகள் என்பதையும், புதிய கற்காலம் இதற்கு முந்தையது என்பதையும் வலுவாக உறுதிப்படுத்தியுள்ளன.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பண்பாட்டுப் பொருள்கள் வாயிலாக இப்பகுதி புதிய கற்காலம் முதல் வரலாற்றுக் காலம் வரை தொடா்ந்து வாழ்விடமாக இருந்துள்ளதையும் அறிய முடிகிறது. மயிலாடும்பாறை அகழாய்வின் போது ஈட்டி முனைகள், அம்பு முனைகள், இரும்பினால் ஆன கத்திகள், கோடாரி, ஈமச்சின்னங்களில் வைக்கப்படும் படையல் பொருள்கள், மூன்றுகால் குடுவை உள்ளிட்ட பானைகள், கிண்ணங்கள் முதலியனவும், மக்கள் வாழ்விடப் பகுதியில் கிடைத்த வட்ட சில்லுகள், பாசிமணிகள், சுடுமண்ணால் ஆன பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மயிலாடும்பாறையில் தொடா்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com