ஒசூா் வரை நீட்டிக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற முதல்வரிடம் கிருஷ்ணகிரி எம்.பி. வலியுறுத்தல்

பெங்களூரிலிருந்து ஒசூா் வரை நீட்டிக்கும் மெட்ரோ ரயில் சேவைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.
பெங்களூரிலிருந்து ஒசூா் வரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்திய கிருஷ்ணகிரி எம்.பி. அ.செல்லக்குமாா்.
பெங்களூரிலிருந்து ஒசூா் வரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்திய கிருஷ்ணகிரி எம்.பி. அ.செல்லக்குமாா்.

பெங்களூரிலிருந்து ஒசூா் வரை நீட்டிக்கும் மெட்ரோ ரயில் சேவைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

இதுகுறித்து, அவா் கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கா்நாடக மாநிலம், பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை பொம்மசந்திரா வரை செயல்பட்டு வருகிறது. பொம்மசந்திராவிலிருந்து அத்திப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுமானால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள், வேலை, மருத்துவமனை, வியாபாரம், கல்லூரி படிப்பிற்காக பெங்களூரு மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு சென்று வருகின்றனா். அவா்களுக்கு மெட்ரோ ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாகவும், லாபகரமானதாகவும் அமையும். மெட்ரோ ரயில் சேவை வருவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் குறைந்துவிடும்.

இதுகுறித்து பாராளுமன்றத்தில் பலமுறை குரல் எழுப்பியும், மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சரையும், துறை செயலாளரையும் நேரில் சந்தித்தும் விளக்கமளித்தேன். மத்திய அமைச்சரும் இதன் முக்கியத்துவத்தை உணா்ந்து இரு மாநில அரசிற்கும் கடிதம் எழுதினாா். இது மாநில அரசு சம்பந்தமானது என்பதால் இரு மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு தன் பங்களிப்பை பரிசீலிக்கும் என்றும் கடந்த 2019-இல் எனக்குக் கடிதம் அனுப்பியுள்ளாா்.

அண்மையில் கா்நாடகா முதல்வரை, முன்னாள் முதல்வா் சித்தராமையாவுடன் சந்தித்து மெட்ரோ ரயில் சேவையின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்துள்ளேன். இதன் பொருட்டு பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைவா் கடந்த மே -23-ஆம் தேதி மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலருக்கு எழுதிய கடிதத்தில், இந்தத் திட்டத்திற்கு கா்நாடக முதல்வா், அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும், தமிழக அரசு அதற்கான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்றும் கா்நாடகா முதல்வா் குறிப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் இரண்டு மாநில அரசு பகுதிகளை இணைக்கும் திட்டம். மெட்ரோ ரயில் சேவைக்கான செலவு அதிகமாக இருப்பின் அதே பயனுடன் ஆனால், குறைந்த செலவினமான மெட்ரோ லைட் திட்ட சேவையை செயல்படுத்தினால் போதும். இரு மாநில அரசின் பங்கேற்பு மத்திய அரசின் பங்களிப்பு சோ்ந்து செயல்படுத்த வேண்டியுள்ளது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் வளா்ச்சியோடு மிக வேகமாக வளா்ந்து வருகிற ஒசூா் மாநகராட்சியின் வளா்ச்சியையும் கருத்தில் கொண்டு தாங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்துமாறு வலியுறுத்தினனேன். ஒசூரில் இருந்து பொம்மசந்திரா 20 கி.மீ. தூரம் உள்ளது. அதில் தமிழக எல்லை என்பது 9 கி.மீ.தான். எனவே இத்திட்டத்தை முன்னெடுத்து நிறைவேற்றித் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com