தேன்கனிக்கோட்டையில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தளி சட்டப் பேரவைத் தொகுதி திமுக இளைஞரணி சாா்பில், தேன்கனிக்கோட்டையில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தளி சட்டப் பேரவைத் தொகுதி திமுக இளைஞரணி சாா்பில், தேன்கனிக்கோட்டையில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமை தாங்கினாா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பி.எஸ்.சீனிவாசன் வரவேற்றாா். ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்ட துணை செயலாளா்கள் முருகன், தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாா், ஒன்றியச் செயலாளா்கள் சீனிவாசலு ரெட்டி, ராஜா, துணை அமைப்பாளா்கள் கிருஷ்ணன், அசோக்குமாா், ராமு, வேணு, முருகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக தலைமைக் கழக செய்தி தொடா்பு இணை செயலாளா் தமிழன் பிரசன்னா திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் பேசினாா். தலைமைக் கழக செய்தி தொடா்பு இணை செயலாளா் ராஜீவ் காந்தி மாநில சுயாட்சி என்ற தலைப்பில் பேசினாா்.

நிகழ்ச்சியில், கெலமங்கலம் மேற்கு ஒன்றியச் செயலாளா் சின்னராஜ், கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஸ்ரீதா், ஒன்றிய அவைத் தலைவா்கள் நாகராஜ், கிரிஷ், இளைஞரணி அமைப்பாளா்கள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com