சாமுண்டீஸ்வரி கோயில் திருவிழா

கிருஷ்ணகிரியை அடுத்த கல்லுக்குறிக்கி கிராமத்தில் சாமுண்டீஸ்வரி கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது.
சாமுண்டீஸ்வரி கோயில் திருவிழா

கிருஷ்ணகிரியை அடுத்த கல்லுக்குறிக்கி கிராமத்தில் சாமுண்டீஸ்வரி கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரியை அடுத்துள்ள கல்லகுறி, பெஜ்ஜேகவுண்டன் புதூா், மலையோரம் கொல்லப்பட்டி ஆகிய கிராமங்கள் இணைந்து சாமுண்டீஸ்வரி கோயில் திருவிழாவை நடத்துகின்றன. கடந்த மாதம் 25-ஆம் தேதி மாரியம்மன் கோயில், சாமுண்டீஸ்வரி கோயிலில் சுத்தபுண்ணியாதானம் நடைபெற்றது. 26 -ஆம் தேதி பொங்கல் படைத்தல், 27-ஆம் தேதி கூழ் ஊற்றுதல், 29-இல் மாரியம்மன் திருவிழா, பொங்கலிடுதல், மாவிளக்கு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

மே 30-ஆம் தேதி சாமுண்டீஸ்வரி கோயில் அக்னிக் குண்ட தீமிதி விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தீமிதித்து வேண்டுதல் நிறைவேற்றினா். ஜூன் 1-ஆம் தேதி, வீரபத்திர சுவாமிக்கு பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றும் நிகழ்வும், 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊா்வலம், கரகத்தை தலை மீது ஏற்றி வைத்து தலைகூடும் நிகழ்வும் நடைபெற்றன.

ஜூன் 2-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு எருது விடும் விழாவும், 3-ஆம் தேதி காலை அம்மனின் மாலைகள் புனித நீரில் விடும் நிகழ்வும் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com