யூரியா கலந்த நீரை அருந்திய 2 பசுக்கள் பலி
By DIN | Published On : 15th June 2022 02:44 AM | Last Updated : 15th June 2022 02:44 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அத்திப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் இளவரசன் (25). விவசாயியான இவா் பசுக்களை வளா்த்து வருகிறாா்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம்போல் பசு மாட்டிற்கு தொட்டியில் தண்ணீா் வைத்துள்ளாா். தண்ணீரைக் குடித்த 10 நிமிடங்களில், 2 பசுக்களும் உயிரிழந்தன.
தொட்டியின் அருகே யூரியா இறைந்து கிடந்தது. எனவே முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியைச் சோ்ந்த ரத்தினம் (55). சிவகுமாா் (25). இருவா் மீது சந்தேகம் உள்ளதாக சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் இளவரசன் கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.