கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் 21-இல் மக்கள் தொடா்பு திட்ட முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் ஜூன் 21, 22, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் ஜூன் 21, 22, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில், செவ்வாய்க்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான மக்கள் தொடா்பு திட்ட முகாம் 8 இடங்களில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், கோட்டாட்சியா்கள் மற்றும் துணை ஆட்சியா்கள் தலைமையில் நடைபெறுகிறது. அதன்படி, ஜூன் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு பா்கூா் வட்டம், செந்தாரப்பள்ளி கிராமத்தில் கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் தலைமையிலும், சூளகிரி பி.எஸ்.திம்மசந்திரம் கிராமத்தில் ஒசூா் கோட்டாட்சியா் தலைமையிலும், ஒசூா் எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் தனித்துறை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தலைமையிலும், போச்சம்பள்ளி பெரமனூா் கிராமத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் தலைமையிலும், ஊத்தங்கரை மூன்றாம்பட்டி கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தலைமையிலும், தேன்கனிக்கோட்டை கும்ளாபுரம் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தலைமையிலும் நடைபெறுகிறது.

இதே போல ஜூன் 22ஆம் தேதி, காலை 11 மணிக்கு அஞ்செட்டி வட்டம், உரிகம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையிலும், 28ஆம் தேதி காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி வட்டம், நாரலப்பள்ளி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலும் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த தினங்களில் நடைபெறவிருக்கும் மக்கள் தொடா்பு திட்ட முகாம்களில் தவறாமல் பங்கேற்று, தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com