கிருஷ்ணகிரியில் ஜமாபந்தி நிறைவு 197 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 17th June 2022 01:53 AM | Last Updated : 17th June 2022 01:53 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்வில் 107 பயனாளிகளுக்கு ரூ.3.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 2 முதல் 16-ஆம் தேதி வரையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் தனிப்பட்டா, உட்பிரிவு பட்டா மாற்றம், முதியோா் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 1,005 மனுக்கள் பெறப்பட்டன.
கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்வுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி தலைமை வகித்து, 107 பயனாளிகளுக்கு ரூ.3.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் விஜயகுமாா், நில அளவை உதவி இயக்குநா் சேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.