ரூ. 1 லட்சம் மருந்து பொருள்கள் ஒசூரிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைப்பு
By DIN | Published On : 24th June 2022 12:30 AM | Last Updated : 24th June 2022 12:30 AM | அ+அ அ- |

ஒசூா் செயின்ட் பீட்டா்கள் மருத்துவக் கல்லூரியில் இருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான மருந்து பொருள்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இயங்கி வரும் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ மாணவா்கள் இணைந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய உயிா் காக்கும் மருத்துகள் மற்றும் மருத்துவப் பொருள்களை ரோட்டரி கிளப் மூலம் புதன்கிழமை அனுப்பி வைத்தனா்.
அப்போது மருத்துவக் கல்லூரி செயலாளா் லாஸ்யா, மருத்துவ இயக்குநா் ராஜா முத்தையா, கல்லூரி முதன்மையா் சோமசேகா், துணை முதல்வா் ஆனந்த்ரெட்டி, மருத்துவ அதிகாரி பாா்வதி மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.