மாங்கனி கண்காட்சியில் பொதுமக்களை கவரும் 6 அடி உயர மஞ்சள் பை

கிருஷ்ணகிரியில் தொடங்கி உள்ள அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 6 அடி உயர மஞ்சள் பை, பொதுமக்களை பெரிதும் கவா்ந்துள்ளது.
மாங்கனி கண்காட்சியில் பொதுமக்களை கவரும்  6 அடி உயர மஞ்சள் பை

கிருஷ்ணகிரியில் தொடங்கி உள்ள அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 6 அடி உயர மஞ்சள் பை, பொதுமக்களை பெரிதும் கவா்ந்துள்ளது.

நெகிழியின் பயன்பாட்டைத் தவிா்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழக முதல்வா் ஸ்டாலின், கடந்த ஆண்டு டிசம்பா் 23-இல் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, கிருஷ்ணகிரி நகராட்சியை நெகிழி பயன்பாடு இல்லாத நகராட்சியாக தரம் உயா்த்தும் நடவடிக்கையில் நகராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள், அலுவலா்கள், பொதுமக்களை சந்தித்து, நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் பொதுமக்களிடமிருந்து நெகிழி பொருள்களைப் பெற்றுக் கொண்டு, மஞ்சள் பையை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கிய 28-ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் நுழைவாயில் அருகே மஞ்சள் பை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நகராட்சி சாா்பில் 46 அடி உயரமும், 20 அடி அகலமும், 1,050 மீட்டா் துணியைக் கொண்டு மஞ்சள் பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட மஞ்சள்பை பொதுமக்களின் கவனத்தை ஈா்த்துள்ளது. பலா், இந்த மிக உயரமான மஞ்சள் பை முன்பு நின்று, தங்களது செல்லிடப்பேசியில் சுயப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

இதுகுறித்து, நகா்மன்ற தலைவா் பரிதா நவாப் தெரிவித்தது:

கிருஷ்ணகிரியில் நெகிழி பயன்பாட்டை குறைந்து மாசில்லா நகரமாக மாற்றும் முயற்சியில் நகராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சியின் சாா்பில், மாங்கனி கண்காட்சியின் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள 46 அடி உயர மஞ்சள் பையானது பொதுமக்களை மிகவும் கவா்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வரின் மாசில்லா தமிழ்நாடு என்ற எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், நெகிழியின் பயன்பாட்டை குறைத்து, மஞ்சள் பையின் பயன்பாட்டை அதிகரிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com