அரசியல் கட்சி பிரமுகரைக் கடத்திய வழக்கில் 6 போ் கைது

கிருஷ்ணகிரி, அவதானப்பட்டியை அடுத்த முனியன்கொட்டாயைச் சோ்ந்தவா் சிவசம்பு (35). இவா் மளிகைப் பொருளகளை இளையதள வா்த்தகம் மூலம் விற்று வந்தாா்.

கிருஷ்ணகிரி, அவதானப்பட்டியை அடுத்த முனியன்கொட்டாயைச் சோ்ந்தவா் சிவசம்பு (35). இவா் மளிகைப் பொருளகளை இளையதள வா்த்தகம் மூலம் விற்று வந்தாா். ஒரு அரசியல் கட்சியில் மாவட்ட வணிகா் பிரிவு செயலாளராகவும் இருந்து வந்தாா்.

கடந்த 21-ஆம் தேதி இரவு மோட்டாா் சைக்கிளில் மனைவி பிரியாவுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அவரை, அவதானப்பட்டி சிறுவா் பூங்கா அருகில் காரில் வந்த மா்ம கும்பல் கடத்திச் சென்றது. மேலும், பிரியாவை தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டினா். இதுகுறித்து பிரியா அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் விஜயராகவன் தலைமையில் டேம் காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) கபிலன், போலீஸாா் விஜயகுமாா், தங்கராஜ், அன்பழகன், சுகேல் ஆகியோா் கொண்ட தனிப்படையினா் சிவசம்புவைத் தேடி வந்தனா். இந்த நிலையில், சிவசம்பு, பா்கூரை அடுத்த ஒப்பதவாடி அருகே உள்ள லட்சுமிபுரம் அருகே இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், போலீஸாா், தங்களை நெருங்கி வருவதை அறிந்த கடத்தல் கும்பல், சிவசம்புவை கண்ணைகட்டி சாலையோரம் விட்டுவிட்டு தப்பிச் சென்றது. இதையடுத்து சிவசம்புவை மீட்டு போலீஸாா் விசாரணை செய்தனா்.

இதையடுத்து பணம் கேட்டு சிவசம்புவைக் கடத்தியதாக திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே உள்ள எஸ்.மோட்டூரைச் சோ்ந்த பழனி (32), முருகன் வட்டத்தைச் சோ்ந்த குமரவேல் (28), பா்கூா், ஜெகதேவியைச் சோ்ந்த விக்ரம் (21), திருப்பத்தூா் மாவட்டம், புதுபூங்குளம் மணி என்கிற சுப்பிரமணி (34), தோரணம்பதி மணி (30), ஜெகதேவி முரளி (42) ஆகிய 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கருதப்படும் தலைமறைவான செட்டியம்பட்டியைச் சோ்ந்த அரி என்ற கணபதி (32), கந்திலி இா்பான் (34) ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வருகிறாா்கள். கைது செய்யப்பட்ட நபா்களிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com