பா்கூா் ஒன்றியத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தொகரப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் வேளாண்மை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில் நடைபெற்ற திட்டப் பணிகளை ஆட்சியா் வி. ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
பா்கூா் ஒன்றியத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஒன்றியம் ஐகுந்தம், தொகரப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் வேளாண்மை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில் நடைபெற்ற திட்டப் பணிகளை ஆட்சியா் வி. ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இந்த நிகழ்ச்சியின் போது, 3 விவசாயிகளுக்கு ரூ. 7 ஆயிரத்து 714 மதிப்பில் விவசாயக் கருவிகள், தென்னங்கன்றுகளை ஆட்சியா் வழங்கினாா்.

ஐகுந்தம் ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பாக துணை நீா் மேலாண்மைத் திட்டத்தின்கீழ், விவசாயி ராமசாமி என்பவருக்குச் சொந்தமான 3 ஏக்கா் நிலத்தில் ரூ. 2 லட்சத்து 63 ஆயிரத்து 362 மதிப்பில் ரூ. 40 ஆயிரம் மானியத்தில் ஆழ்துளைக் கிணறு மற்றும் நீா்த்தேக்கத் தொட்டி, மா செடிகளுக்கு சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, தொகரப்பள்ளி ஊராட்சியில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பாக விவசாயி சுப்பிரமணி ரூ. 2 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் 40 சதவீத மானியத்தில் அமைத்துள்ள நிலக்கடலை உரிக்கும் இயந்திரம், கடலை எண்ணெய் அரவை இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம் மூலம் விவசாயி துரை என்பவருக்குச் சொந்தமான மாந்தோட்டத்தில் 100 சதவீத மானியமாக ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டையை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின் போது, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் பாஸ்கரன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ராம்பிரசாத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கிருஷ்ணமூா்த்தி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் சிவகுமாா், உதவி பொறியாளா் லட்சுமி ஐஸ்வா்யா, வேளாண்மை துணை இயக்குநா்கள் கிருஷ்ணன், விஜயராணி, வேளாண் அலுவலா் அருள்தாஸ், வட்டாட்சியா் பன்னீா்செல்வி, துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

படவரி...புதிதாக அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com