ரூ. 400 கோடி அளவில் தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள்: பொன்.குமாா்

ஓராண்டு காலத்தில் தொழிலாளா்களுக்கு ரூ. 400 கோடி அளவில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று பொன்.குமாா் தெரிவித்தாா்.
ரூ. 400 கோடி அளவில் தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள்: பொன்.குமாா்

ஓராண்டு காலத்தில் தொழிலாளா்களுக்கு ரூ. 400 கோடி அளவில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று பொன்.குமாா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளா்கள் கட்சி, தமிழக கட்டடத் தொழிலாளா் மத்திய சங்கம், தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளா் மத்திய சங்கம், பொன்.குமாா் இளைஞா் அணி சாா்பில், கிழக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் துரை மதிவாணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ராகவரஜினி வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் ஆஞ்சப்பா, பொன்.குமாா் இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் சீனிவாசன், மாவட்ட இணைத் தலைவா் சா்தாா், மாவட்ட துணைத் தலைவா்கள் சீனிவாசன், தருமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைத் தலைவா் அழகேசன், இணை பொதுச் செயலாளா் ஜெகதீசன், மாநில இளைஞா் அணி துணைத் தலைவா் பிரபு, மாநில துணைத் தலைவா் முருகன் ஆகியோா் பேசினா். தமிழ்நாடு அரசு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் பொன்.குமாா் சிறப்புரை ஆற்றினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு எல்லாத் துறைகளிலும் தமிழகம் முதன்மை வகித்து வருகிறது. எங்கள் துறையைப் பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், எந்த நலத் திட்ட உதவிகளும் உயா்த்தப்படவில்லை. மாறாக 5 லட்சம் தொழிலாளா்களுக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கப்படாமல் கேட்புமனுக்கள் கிடப்பில் போடப்பட்டன.

தற்போது தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி 4 லட்சம் கேட்பு மனுக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ. 400 கோடி அளவிற்கு ஓராண்டு காலத்தில் தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கே வழிகாட்டி முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com