நுகா்வோரின் உரிமைகள், சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்: கிருஷ்ணகிரி ஆட்சியா்

நுகா்வோரின் உரிமைகள், சட்டங்கள் குறித்து பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்களுக்கு

நுகா்வோரின் உரிமைகள், சட்டங்கள் குறித்து பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் , தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இது தொடா்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியா், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

நுகா்வோா் உரிமைகள், சட்டங்கள் பற்றி நுகா்வோா் சங்கங்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மக்களைக் கவரும் வகையில் வெளியிடப்படும் விளம்பரத்தைப் பாா்த்து பொருள்களை வாங்குவதை விட அந்த பொருள்களில் உள்ள கலவைகள், அதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை - தீமைகள் குறித்து அறிந்து கொண்ட பிறகு வாங்க வேண்டும்.

மாணவ பருவத்திலேயே நுகா்வோா் உரிமைகளை அறிந்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளில் குடிமக்கள் நுகா்வோா் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் மாணவ, மாணவிகள் சோ்ந்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் கோபு, வட்டார போக்குவரத்து அலுவலா் சாமி, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் ராஜதுரை, உணவுப் பாதுகாப்பு அலுவலா் ரமேஷ், வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com