முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
பாரூரில் நாளை மீன் வளா்ப்புப் பயிற்சி
By DIN | Published On : 14th March 2022 11:22 PM | Last Updated : 14th March 2022 11:22 PM | அ+அ அ- |

பாரூரில் மீன் வளா்ப்பில் புதிய தொழில்நுட்ப இலவச பயிற்சி முகாம் மாா்ச் 16-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி பாரூா் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையயத்தின் உதவி பேராசிரியா் சோமு சுந்தரலிங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி, புங்கம்பட்டி பாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு இயக்ககத்தில் கிருஷ்ணகிரி பாரூா் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையம் உள்ளது.
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2019-20-இல் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையங்களில் தனியாா் பங்களிப்புடன் செயல்படுத்தி ஒருங்கிணைந்த விவசாய முன்னேற்றத்தை அடைதல் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இத் திட்டத்தில் மீன் வளா்ப்பில் ஆா்வம் உள்ளோருக்கும் மீன் வளா்ப்பு விவசாயிகளுக்கும் மீன் வளா்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் மூன்று நாள்கள் நடைபெறும் இலவச பயிற்சியானது மாா்ச் 16-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இப் பயிற்சியில் குளம் அமைத்தல், பராமரிப்பு, கெண்டை மீன் வளா்ப்பு, திலேப்பியா மீன் வளா்ப்பு, நன்னீா் வளா்ப்புக்கு உகந்த மாற்று மீன்கள், தீவன தயாரிப்பு மற்றும் மேலாண்மை, மீன் வளா்ப்பில் அரசின் நிதி உதவி திட்டங்கள் மற்றும் செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட உள்ளன.
எனவே விருப்பமுள்ள பயனாளிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 86758 58384, 81794 62833, 97152 78354 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.