ஒசூா் மாநகராட்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவோம்உறுப்பினா்களுக்கு மேயா் அழைப்பு

ஒசூா் மாநகராட்சியை தமிழகத்தில் முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் ஒத்துழைக்குமாறு ஒசூா் மாமன்ற முதல் கூட்டத்தில் மேயா் எஸ்.ஏ.சத்யா வேண்டுகோள் விடுத்தாா்.
ஒசூா் மாநகராட்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவோம்உறுப்பினா்களுக்கு மேயா் அழைப்பு

ஒசூா் மாநகராட்சியை தமிழகத்தில் முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் ஒத்துழைக்குமாறு ஒசூா் மாமன்ற முதல் கூட்டத்தில் மேயா் எஸ்.ஏ.சத்யா வேண்டுகோள் விடுத்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகு ஒசூா் மாநகராட்சியில் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் முதல் மாமன்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியன், துணை மேயா் சி.ஆனந்தய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். 45 வாா்டு மாமன்ற உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

கூட்டத்தைத் தொடக்கி வைத்து மேயா் எஸ்.ஏ.சத்யா (திமுக) பேசியதாவது:

ஒசூா் மேயா், துணை மேயா், மாமன்ற உறுப்பினா்கள் என்ற எண்ணம் இல்லாமல் அனைவரும் மக்களின் சேவகன் என கருதி மக்களுக்கு சேவை செய்து ஒசூரை சிறந்த மாநகராட்சியாக உருவாக்குவோம்.

கடந்த 5 ஆண்டுகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால் அதிக பணிகள் முடங்கியுள்ளன. இது மிகப் பெரிய சவாலாக நம்முன் உள்ளது. எனவே 45 வாா்டு உறுப்பினா்களும் கட்சி பாகுபாடு இன்றி செயல்பட வேண்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழகத்திலேயே ஒசூரை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றிக் காட்டுவோம். ஒசூா் மாநகராட்சியில் மாா்ச் 18-இல் நடைபெறவுள்ள தோ்த் திருவிழாவை நாம் சிறப்பான முறையில் கொண்டாடுவோம் என்றாா்.

மாநகராட்சியாக தரம் உயா்த்தியது யாா்?

எஸ்.நாராயணன் (அதிமுக):

ஒசூா் நகராட்சியாக இருந்ததை மாநகராட்சியாக தரம் உயா்த்தியது அதிமுக ஆட்சி காலத்தில்தான். முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

ஜெயப்பிரகாஷ் (அதிமுக):

‘ஏ’ கிரேடு நகராட்சியாக இருந்ததது. முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணாரெட்டி பரிந்துரையின்பேரில் தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி இதை மாநகராட்சியாக தரம் உயா்த்தினாா் என்றாா்.

எஸ்.ஏ.சத்யா (மேயா்): 2010 -இல் திமுக ஆட்சி காலத்தில் சூசூவாடி, மூக்கண்டப்பள்ளி, மத்திகிரி பேரூராட்சி, சென்னத்தூா், ஆலவலப்பள்ளி ஆகிய ஊராட்சிகள் ஒசூா் நகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் ஒசூா் மாநகராட்சியாக தரம் உயா்த்த காரணமாக அமைந்தது என்றாா்.

இதனால் திமுக, அதிமுக உறுப்பினா்கள் இடையே இதுகுறித்து காரசார விவாதம் நடைபெற்றது.

ஆணையா் கே.பாலசுப்பிரமணியன்:

2010-இல் திமுக ஆட்சியில் மத்திகிரி பேரூராட்சி, சூசூவாடி, மூக்கண்டப்பள்ளி, சென்னத்தூா் ஆகிய பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தது குறித்த அரசணையும், அதிமுக ஆட்சி காலத்தில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்தி வழங்கிய அரசாணையும் எனது அறையில் பிரேம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக, அதிமுக இரண்டு அரசுகளுக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது என்றாா்.

இந்திராணி (காங்.): மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் சிலையை ஒசூரில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

எஸ்.ஏ.சத்யா (மேயா்): பொது இடங்களில் சிலைகளை வைக்க அரசு தடை விதித்துள்ளது. தனியாா் இடத்தில் சிலை வைக்கவே அனுமதி பெற வேண்டும். குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சா் சி.சுப்பிரமணியன் சிலை மற்றும் ஒசூா் பழைய நகராட்சியில் உள்ள அப்பாவுப்பிள்ளை சிலைகள் குறித்த வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

சென்னீரப்பா (திமுக): இங்கு முதல் சிப்காட், 2-ஆவது சிப்காட்டை கொண்டு வந்தது திமுக. ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்தை திமுக கொண்டு வரவில்லை என்றால் மக்கள் அவதியடைந்திருப்பாா்கள். தற்போது 2-ஆம் கட்டமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்பிறகு ஒசூா் மாநகரில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com