கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
By DIN | Published On : 18th March 2022 12:12 AM | Last Updated : 18th March 2022 12:12 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அருகே கட்டடப் பணியின் போது தவறி கீழே விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், எம்.சி.பள்ளி அருகே உள்ள வள்ளுவா்புரத்தைச் சோ்ந்த முரளி (32), கட்டடத் தொழிலாளி. இவா், கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயா் கோயில் அருகே உள்ள ஒரு வீட்டில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயரமான கட்டடத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...