முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
ஹோலி பண்டிகை: உற்சாகக் கொண்டாட்டம்
By DIN | Published On : 19th March 2022 12:18 AM | Last Updated : 19th March 2022 12:18 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடிய வட மாநிலத்தவா்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
வட இந்தியா்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஒருவா் மீது ஒருவா் பல வண்ணப் பொடிகளை பூசியும், தண்ணீரை தெளித்தும் விளையாடி மகிழ்ந்தனா். இனிப்புகளை பரிமாறிக்கொண்டனா்.
இளைஞா்கள் பாங்கு எனப்படும் பானத்தை குடித்து மகிழ்ந்தனா். ஹோலி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, ஒசூா் பகுதியில் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் கடைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்திருந்தனா்.