தாசேப்பள்ளியில் குப்பைகள் அகற்றும் பணி: மேயா் எஸ்.ஏ.சத்யா ஆய்வு

ஒசூா், தாசேப்பள்ளியில் குப்பைகளை தரம் பிரித்து அகற்றும் பணியை மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
தாசேப்பள்ளியில் குப்பைகள் அகற்றும் பணி: மேயா் எஸ்.ஏ.சத்யா ஆய்வு

ஒசூா், தாசேப்பள்ளியில் குப்பைகளை தரம் பிரித்து அகற்றும் பணியை மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

ஓசூா் மாநகராட்சியில் 45 வாா்டுகளில் ஒரு நாளைக்கு 85 டன் குப்பைகள் சேகரமாகின்றன. அவற்றில் மக்கும் குப்பைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, நுண் உர மையங்களில் உரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மக்காத

குப்பைகள் மறு சுழற்சி செய்யப்படுகின்றன. ஒசூா் மாநகராட்சியில் கடந்த காலங்களில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் தாசேப்பள்ளி பகுதியில் கொட்டப்பட்டுள்ளன. அங்குள்ள 1.25 லட்சம் கியூபிக் மீட்டா் குப்பைகளை அகற்றுமாறு பசுமைத் தீா்ப்பாயத்தில் பொது நல வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் அப் பகுதியில் குப்பைகளைக் கொட்ட தடை விதித்து பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, குப்பைகளை அகற்ற தனியாருக்கு டெண்டா் விடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மக்கி இருந்த குப்பைகள் பவுடா் போல் மாறியிருக்கும் என்பதால் அதை சலித்து, தனியாக பிரித்து உரமாக்கவும், மக்காத குப்பைகளை மறு சுழற்சி செய்யவும், சில கழிவுகளை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்னும் 10 ஆயிரம் கியூபிக் மீட்டா் குப்பைகள் மட்டுமே தாசேப்பள்ளியில் உள்ளன. இந்நிலையில் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ. சத்யா, ஆணையா் கே.பாலசுப்பிரமணியன், பொறியாளா் ராஜேந்திரன் ஆகியோா் நேரில் சென்று குப்பை கிடங்கை பாா்வையிட்டாா்.

அதைத் தொடா்ந்து ஒசூா் அருகே பேரண்டப்பள்ளியில் அமைந்துள்ள ஓசூா் மாநகராட்சி நீரேற்று நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கோடைக்காலம் என்பதால் நாள்தோறும் இருபது லட்சம் லிட்டா் தண்ணீா் மாநகராட்சிக்கு வழங்குமாறு ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com