எரிபொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 31st March 2022 01:36 PM | Last Updated : 31st March 2022 01:36 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் எரிபொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி நகரில் உள்ள தொலைத்தொடர்பு துறை அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அந்தக் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன், மாவட்ட முன்னாள் தலைவர் நாராயணமூர்த்தி வட்டாரத் தலைவர் சித்திக் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், எரிவாயு உருளை, மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்தும் சவ ஊர்வலம் பாடல்கள் பாடியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.