ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நல்லூா் கிராம சபை கூட்டத்தில் தீா்மானம்
By DIN | Published On : 02nd May 2022 02:36 AM | Last Updated : 02nd May 2022 02:36 AM | அ+அ அ- |

நல்லூா் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஒன்றியம், நல்லூா் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்பட 26 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நல்லூா் ஊராட்சிமன்றத்தில் கிராம சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தா வீரபத்ரப்பா தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில் நல்லூா் ஊராட்சியில் குறைந்தழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால் கிராமத்துக்கு துணை மின்நிலையம் அமைக்க மின்வாரியத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஊராட்சியில் சாலை வசதி, கழிவுநீா் கால்வாய் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தனி தீா்மானங்கள் உள்பட மொத்தம் 26 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனா்.