முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
அட்சய திரிதியை:தங்க நகைகள் வாங்க மக்கள் ஆா்வம்
By DIN | Published On : 03rd May 2022 11:53 PM | Last Updated : 03rd May 2022 11:53 PM | அ+அ அ- |

அட்சய திரிதியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் கடையில் தங்க நகைகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் கூடும் என்பது நம்பிக்கை. அதன்படி, அட்சய திருதியை நாளான செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரியில் உள்ள நகைக் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக, கிருஷ்ணகிரி கே.தியேட்டா் எதிரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் நகைக் கடையில், ஏராளமான வாடிக்கையாளா்கள் நகைகளை வாங்குவதற்காக ஆா்வத்துடன் குவிந்தனா். சில வாடிக்கையாளா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பே, முன்பணம் செலுத்தி, தங்களுக்கு விருப்பமான தங்க நகைகளை வாங்கிச் சென்றனா்.