முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில்...
By DIN | Published On : 03rd May 2022 11:54 PM | Last Updated : 03rd May 2022 11:54 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பா்கூா், ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, ஒசூா், மத்தூா், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, ஜெகதேவி, தளி, தேன்கனிக்கோட்டை, அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து, சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை கட்டித்தழுவி இனிப்புகளை வழங்கியும், தானம் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள ராஜீவ் நகா், வெங்கடாபுரம், நமாஸ் பாறை ஆகிய இடங்களில் உள்ள ஈத்கா மைதானங்களில் சிறப்புத் தொழுகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள மசூதியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பெண்கள் மட்டும் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.