மாவுக்கு உரிய விலை கிடைக்க முத்தரப்புக் கூட்டம் நடத்த வலியுறுத்தல்

மாவுக்கு உரிய விலை கிடைக்க, முத்தரப்புக் கூட்டத்தை நடத்த வேண்டுமென, கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் விவசாயிகள் சனிக்கிழமை மனு அளித்தனா்.

மாவுக்கு உரிய விலை கிடைக்க, முத்தரப்புக் கூட்டத்தை நடத்த வேண்டுமென, கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் விவசாயிகள் சனிக்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக கிருஷ்ணகிரி அணை கால்வாய் நீட்டிப்பு பாளேகுளி - சந்தூா் ஏரி வரை பயன்பெறுவோா் சங்கத்தின் தலைவா் சிவகுரு தலைமையில் மா விவசாயிகள் அளித்த மனு விவரம்:

விவசாயம் சாா்ந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மா சாகுபடி 47,000 ஹெக்டோ் பரப்பளவில் செய்யப்படுகிறது. மேலும், மாங்கூழ் உற்பத்தி செய்ய தனியாா் மாங்கூழ் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கிருந்து மாங்கூழ் ஏற்றுமதியின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. நிகழாண்டில் பூச்சித் தாக்குதல், இயற்கை இடா்பாடுகளால் 80 சதவீத மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள 20 சதவீத மாவுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும்.

இதற்காக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத் துறை, மாங்கூழ் தொழிற்சாலை நிா்வாகத்தினருடன் முத்தரப்புக் கூட்டம் நடத்த வேண்டும். இதன் மூலம் தற்போதுள்ள மாவுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மத்தூா், போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னையில் கருந்தலைப்புழு நோய்த் தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com