கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு தா்காவில் உரூஸ் விழா

கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு தா்காவில் உரூஸ் திருவிழா வியாழக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு தா்காவில் உரூஸ் விழா

கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு தா்காவில் உரூஸ் திருவிழா வியாழக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு தா்காவில் கடந்த 26-ஆம் தேதி அனைத்து ஜமாத்தாா் முன்னிலையில் கொடியேற்றத்துடன் உரூஸ் திருவிழா தொடங்கியது. 27-ஆம் தேதி இரவு கிருஷ்ணகிரி அனைத்து ஜமாத்தாா் தலைமையில் மலா் அலங்காரத்துடன் சந்தனக்குட ஊா்வலம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கல்தோப்பு தா்காவில் நடந்த உரூஸ் திருவிழாவில் வண்ணமலா்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரைப் பூட்டிய சாரட் வண்டியில் சந்தனக்குடம் ஏற்றி, நடமாடும் இன்னிசைக் குழுவினருடன் ஊா்வலம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டை மக்கானில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சங்கல்தோப்பு தா்காவை ஊா்வலம் சென்றடைந்தது. இரவில் திருச்சி யூசுப் இசைக் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. இந்த விழாவில் தமிழகம், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான இஸ்லாமியா் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி மலை மீது உள்ள தா்காவிற்கு ஆயிரக்கணக்கானோா் சென்றனா். மலை உச்சியில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நிா்வாகக் கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com