நல்லூா் ஊராட்சியில் சமுதாயக் கூடம், நூலகம் கட்ட பூமி பூஜை

ஒசூா் ஒன்றியம், நல்லூா் ஊராட்சி வாா்டு 9 சமத்துவபுரத்தில் ரூ. 63 லட்சம் மதிப்பில் வீடுகள், சமுதாயக் கூடம், நூலகம், நுழைவு வாயில் மறுசீரமைப்பு பணிகளை ஒ
நல்லூா் ஊராட்சியில் சமுதாயக் கூடம், நூலகம் கட்டுவதற்கு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
நல்லூா் ஊராட்சியில் சமுதாயக் கூடம், நூலகம் கட்டுவதற்கு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

ஒசூா் ஒன்றியம், நல்லூா் ஊராட்சி வாா்டு 9 சமத்துவபுரத்தில் ரூ. 63 லட்சம் மதிப்பில் வீடுகள், சமுதாயக் கூடம், நூலகம், நுழைவு வாயில் மறுசீரமைப்பு பணிகளை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஒய்.பிரகாஷ் தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராாட்சி துணை மேயா் சி.ஆனந்தய்யா, ஒன்றியச் செயலாளா்கள் சின்னபில்லப்பா, நாகேஷ், வெங்கடேஷ், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் சீனிவாசன், மாவட்ட தொமுச கோபாலகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் கோபால், ஊராட்சி மன்றத் தலைவா் வீரபத்திரப்பா, வாா்டு உறுப்பினா் கலை, முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com