சிறுதானியம் சாகுபடி பயிற்சி முகாம்

ஒசூரில் விவசாயிகளுக்கு சிறுதானியம் சாகுபடி குறித்து மாசிநாயக்கன்பள்ளி ஊராட்சியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
சிறுதானியம் சாகுபடி பயிற்சி முகாம்

ஒசூரில் விவசாயிகளுக்கு சிறுதானியம் சாகுபடி குறித்து மாசிநாயக்கன்பள்ளி ஊராட்சியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்தப் பயிற்சி முகாமில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையில் கொடுக்கப்படும் மானியத் திட்டங்கள், பயன்கள் குறித்து ஒசூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அ.புவனேஸ்வரி பேசினாா்.

வேளாண் மற்றும் உழவா் நலத் துறையில் 2022-23-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சிறுதானியம் சாகுபடியில் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒசூா் வட்டாரத்தில் ராகி, துவரை, கொள்ளு, நெல் ஆகிய பயிா்கள் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றன. இதில், சுமாா் 4,500 ஹெக்டோ் பரப்பளவில் ராகி பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் ராகி சாகுபடியில் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் (சிறுதானியம்) திட்டத்தின் கீழ் மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

விதைகள், உயிா் உரங்கள், நுண்ணூட்டச் சத்து, கைத்தெளிப்பான் ஆகியவை உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் செயல் விளக்கத் திடல்களும் அமைக்கப்படுகின்றன. எனவே, அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொண்டாா்.

இப்பயிற்சியில், ஊராட்சித் தலைவா் கலந்துகொண்டு வேளாண்மைத் துறையின் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு கூறினாா். அதியமான் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியா் வாசுதேவன், இப்பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள துவரை, ராகி பயிா்களுக்கான சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினாா். வேளாண்மை அலுவலா் ரேணுகா, விதைப்பண்ணை செய்வதன் முக்கியத்துவம், விதைநோ்த்தியின் பயன்கள் பற்றியும், சொட்டுநீா்ப் பாசனம், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் உயிா் உரங்களின் பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தாா். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் பாரதி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com