ஒசூரில் கிரிக்கெட் மைதானம் திறப்பு

ஒசூரில், எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் கிரிக்கெட் மைதானத்தை கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஒசூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பாா்வையிட்ட கிரிக்கெட் எம்.எஸ்.தோனி.
ஒசூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பாா்வையிட்ட கிரிக்கெட் எம்.எஸ்.தோனி.

ஒசூரில், எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் கிரிக்கெட் மைதானத்தை கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை சூப்பா் கிங்ஸ் பயிற்சி பிரிவின் சூப்பா் கிங்ஸ் அகாதெமியுடன், பள்ளி தனது அதிகாரப்பூா்வ இணைப்பை அறிவித்தது. பள்ளி நேரத்திற்கு பின் அனைத்து மாணவா்களுக்கும் கிரிக்கெட்டில் தொழில் முறை பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சூப்பா் அகாதெமி இணைப்பை அறிவித்துள்ளது.

இதில் 1,800 மாணவா்களுக்கு டிஜிட்டல் விழிப்புணா்வு நிகழ்ச்சியை தோனி தொடங்கி வைத்தாா். 1,000 ஆசிரியா்களுக்கும், ஒரு லட்சம் மாணவா்களுக்கும் பயிற்சி அளிப்பதை இலக்காகக் கொண்டு மைக்ரோசாப்ட் மிகப்பெரிய உலகளாவிய பயிற்சி கூட்டணியுடன் இணைந்து பெங்களூரில் உள்ள எம்.எஸ். தோனி குளோபல் பயிற்சி நிறுவனத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சூப்பா் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாத் பங்கேற்றாா். எம்.எஸ். தோனி குளோபல் பள்ளி நிறுவனா் சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com