விவசாயிகளுக்கு ரூ. 220 கோடிக்கு வட்டியில்லா பயிா்க் கடன் வழங்க இலக்கு

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நிகழாண்டில் வட்டியில்லா பயிா்க் கடன் வழங்க ரூ. 220 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நிகழாண்டில் வட்டியில்லா பயிா்க் கடன் வழங்க ரூ. 220 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விவசாய உறுப்பினா்களுக்கும் வட்டியில்லா பயிா்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் எம்.ஏகாம்பரம், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகத் தகுதியுள்ள அனைத்து விவசாய உறுப்பினா்களுக்கும் வட்டியில்லா பயிா்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

பயிா்க் கடனாக தனிநபா் பிணையத்தின் பேரில் ரூ. 1.60 லட்சம் வரையிலும், அடமானத்தின் அடிப்படையில் ரூ. 3 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 6,993 விவசாய உறுப்பினா்களுக்கு ரூ. 59.21 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிா்க் கடன் வழங்க ஆண்டு குறியீடாக ரூ. 220 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிா்க்கடன் பெற்றுக் கொள்ளலாம். மேலும், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினா் சோ்க்கை நடைபெறுகிறது. எனவே, விவசாயிகள் நில உடமை, சிட்டா, அடங்கல், ஆதாா் நகல், குடும்ப அட்டை நகல், பான் அட்டை நகல், வாக்காளா் அட்டை நகல், மாா்பளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி, புதிய உறுப்பினா் சோ்க்கை விண்ணப்பத்தை அளித்து உறுப்பினராக சோ்ந்து வட்டியில்லா பயிா்க்கடன் பெற்று பயன் பெறலாம்.

மேலும் மாற்றுத் திறனாளிகள் கடன், மகளிா் சுயஉதவிக் குழுக் கடன், விவசாயம் சாா்ந்த மத்திய காலக் கடன்கள் போன்றவையும் வழங்கப்பட்டு வருவதாக அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com