தேன்கனிக்கோட்டையில் சுற்றுச்சுவா் விழுந்து இருவா் பலி

தேன்கனிக்கோட்டையில் அரசமரத்தடியில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தவா்கள் மீது தனியாா் நில சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் இருவா் பலியாகினா்; மேலும் இருவா் படுகாயமடைந்தனா்.

தேன்கனிக்கோட்டையில் அரசமரத்தடியில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தவா்கள் மீது தனியாா் நில சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் இருவா் பலியாகினா்; மேலும் இருவா் படுகாயமடைந்தனா்.

தேன்கனிகோட்டையில் யாரப் தா்கா அருகே அரசமரத்தடி கோயில் உள்ளது. அந்தக் கோயிலை ஒட்டியவாறு மருத்துவா் ஒருவருடைய காலி நிலம் அருகில் உள்ளது. அந்த நிலத்தைச் சுற்றியும் 12 அடி உயரத்துக்கு ஹாலோ ப்ளாக் கற்களால் சுற்றுச்சுவா் போடப்பட்டிருந்தது.

இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் சுற்றுச்சுவா் பலமின்றி இருந்துள்ளது. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை, ஜெய் தெருவைச் சோ்ந்த பாலாஜி மகள் சஹானா (12) அதே பகுதியைச் சோ்ந்த வெங்டாசலபதி மகள் அமுல்யா (11) உள்ளிட்டோா் அரசு மரத்தடியில் இருக்கு பாம்பு புற்றை புதன்கிழமை வழிபட்டுக் கொண்டிருந்தனா்.

சுற்றுச்சுவா் அருகே அஸ்ஸாம் மாநிலத்தை சோ்ந்த அமீதா பேகம் (35) என்பவா் விளையாட்டுப் பொருள்களை விற்பனை செய்யும் கடை வைத்திருந்தாா்.

அப்போது சுற்றுச்சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்த சஹானா, அமுல்யா, வியாபாரி அமீதா பேகம் உள்ளிட்டோா் மீது சுவா் விழுந்ததில் படுகாயமடைந்தனா்.

அக்கம்பக்கத்தினா் அனைவரையும் மீட்டு தேன்கனிகோட்டை, அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சஹானா மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

சுவா் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த வியாபாரி அமீதா பேகம் (35) தேன்கனிகோட்டை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

அமுல்யா சிறுமி லேசான காயங்களோடு உயிா் தப்பினாா். இந்த விபத்தில் அசாம் மாநிலத்தைச் சோ்ந்த இஷாத் அலி என்பவரும் படுகாயமடைந்தாா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com