கிருஷ்ணகிரி காவலா் குடியிருப்பில் சுகாதார சீா்கேடு

கிருஷ்ணகிரியில் உள்ள காவலா் குடியிருப்பில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் உள்ள காவலா் குடியிருப்பில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட ஜக்கப்பன் நகா் பகுதியில் உள்ள காவலா் குடியிருப்பில் 63 வீடுகள் உள்ளன. இதில் அடுக்குமாடி குடியிருப்பாக கடந்த 2015-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 32 வீடுகளும் அடங்கும்.

இந்தக் குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீா், அங்குள்ள தொட்டியில் பாதுகாப்பற்ற முறையில் தேங்கி உள்ளது. இதனால், துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீா்கேடும் ஏற்படுகிறது.

இப்பகுதியில் தேங்கும் கழிவுநீரை அவ்வப்போது, குடியிருப்புவாசிகள் தங்களது சொந்த செலவில் சுத்தம் செய்து வருகின்றனா். இதுவரையில் நகராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து காவலா் குடியிருப்புவாசிகள் தெரிவித்தது:

காவலா் குடியிருப்பு வீடுகள் பராமரிப்பைக் கடந்த 2017-ஆம் ஆண்டு நகராட்சி கட்டுப்பாட்டுக்கு வழங்கி ரூ.4.28 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. கழிவுநீரை புதைகுழி சாக்கடை திட்டத்தில் இணைக்கும் பணிகளுக்காக ரூ. 2.67 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், புதைகுழி சாக்கடை திட்ட கழிவுநீா் இணைப்பு குழாய்களை முறையாக இணைக்கவில்லை. இதனால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் வெளியேற முடியாத நிலை உள்ளது. இந்தக் குடியிருப்புப் பகுதியில் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதே இல்லை என்றனா். எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலா்கள், இந்த இடத்தை ஆய்வு செய்து, கழிவுநீா் தேங்காமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com