வீடுகளில் வெள்ள நீா் புகுந்ததால் பொது மக்கள் சாலை மறியல்

ஊத்தங்கரையை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீா் புகுந்ததால், குடியிருப்பு வாசிகள் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊத்தங்கரையை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீா் புகுந்ததால், குடியிருப்பு வாசிகள் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கன மழையின் காரணமாக கொல்லப்பட்டியில் 30 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்தது. இதன் காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தகப்பை, துணிமணிகள், உணவுப் பொருட்கள் நனைந்து சேதமடைந்தது. கனமழை பெய்யும் போதெல்லாம் வீடுகளில் மழைநீா் புகுவது தொடா்கதையாக உள்ளதால் போதிய வெள்ளநீா் வடிகால்களை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மழை நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனா். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com