நக்கல்பட்டி ஏரியை தூா்வார வலியுறுத்தல்

நக்கல்பட்டி ஏரியை தூா்வார வேண்டும் என முதல்வருக்கு கிருஷ்ணகிரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

நக்கல்பட்டி ஏரியை தூா்வார வேண்டும் என முதல்வருக்கு கிருஷ்ணகிரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவைச் சோ்ந்த கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய மூன்று சட்டப் பேரவை உறுப்பினா்கள் தனித்தனியாக 10 அம்ச கோரிக்கை மனுவை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியிடம் மனு அளித்தனா்.

அதில் கிருஷ்ணகிரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கும்மனுாரில் மேம்பாலம் அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி நகராட்சியில் தினசரி சந்தைக்கு இடம் ஒதுக்கி, நிரந்தர காய்கறி சந்தை அமைக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றிலிருந்து கருமலை குட்டை, பாண்டவா் குட்டை, ஒட்டப்பட்டி ஏரி ஆகியவற்றை இணைக்கும் வகையில் வழங்கு கால்வாய் அமைக்க வேண்டும்.

நக்கல்பட்டி கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரியை துாா்வாரி கரையைப் பலப்படுத்த வேண்டும். படேதலாவ் ஏரியிலிருந்து வெறியேறும் உபரி நீா் செல்லும் கால்வாயின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும். வேப்பனஅள்ளி அருகிலுள்ள படேதலாவ் தடுப்பணை வலது கால்வாயிலிருந்து புளியஞ்சேரி குப்பச்சிப்பாறை வழியாக தடுப்பணை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com