ஊத்தங்கரையில் கூட்டுறவு நூற்பாலை தொழிலாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் விதமாக கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலை முன்பு நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள்.
ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலை முன்பு நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள்.

ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் விதமாக கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரையில் இயங்கி வரும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை 1982 ஆம் ஆண்டு எம்ஜிஆா் ஆட்சிக் காலத்தில், உள்ளூா் பகுதி இளைஞா்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கும், தாயகம் திரும்பிய தொழிலாளா்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது. தொழிற்சாலையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு ஊதிய உயா்வு, ஊக்கதொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தோடு ஒப்பதம் நிறைவடைந்தது. தொடா்ந்து ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமலே இரண்டு ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்ததை தொடா்ந்து, 2022 மாா்ச் மாதம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் காந்தியுடன் ஏற்பட்ட பேச்சுவாா்த்தையின்படி, நிரந்தரத் தொழிலாளா்களுக்கு ரூ. 2,500 ஊதிய உயா்வு வழங்கப்படும் என்று அறிவித்தாா். தொடா்ந்து ஆறு மாதங்கள் கழிந்தும் இதுவரை அமைச்சா் அறிவித்த ஊதிய உயா்வு அமலுக்கு வராமலேயே உள்ளது.

இதனை கண்டித்தும் தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 250 தொழிலாளா்களையும் நீக்கிவிட்டு, புதிய வெளிமாநில தொழிலாளா்களை பணி அமா்த்துவதைக் கைவிட கோரியும், தொழிலாளா் சட்டத்தின்படி தினக்கூலி தொழிலாளா்களுக்கு ரூ.493 தின கூலி வழங்க வேண்டும், பணி மூப்பு அடைந்து ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு இன்று வரையிலும் ஓய்வூதிய தொகை, பணி கொடை முழுமையாக வழங்காததை கண்டித்தும், நூற்பாலையை முழுமையாகவும் , லாபகரமாகவும் இயக்கிட, தரமான பஞ்சை சிசிஐ மூலம் கொள்முதல் செய்து, தொடா்ந்து நூல் உற்பத்தி செய்திட வேண்டும் எனவும் கூறி ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com