கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 777 பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து 2023-24 கல்வியாண்டுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்குகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 777 பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

கோடை விடுமுறை முடிந்து 2023-24 கல்வியாண்டுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்குகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 777 பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2022 - 23-ஆம் கல்வியாண்டில் மாணவா்களுக்கான ஆண்டு இறுதி தோ்வுகள் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி நிறைவடைந்தது. அதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒரு மாத விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-இல் 6 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புக்கும், ஜூன் 5 முதல் 1 முதல் 5-ஆம் வகுப்புக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக மாணவா்களின் நலன் கருதி, அனைத்து மாணவா்களுக்கும் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும், வெப்பத்தின் தாக்கம் குறையாததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதியை பள்ளிக் கல்வித் துறை ஒத்திவைத்தது.

அதன்படி, பள்ளிகள் திறக்கும் தேதியை 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் ஜூன் 12-ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஜூன் 14-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படுகிறது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பா்கூா், காவேரிப்பட்டணம், ஒசூா், கெலமங்கலம், மத்தூா், சூளகிரி, தளி, ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி ஆகிய 10 வட்டாரங்களில் உள்ள அரசு, தனியாா் நடுநிலைப் பள்ளிகள் 327, உயா்நிலைப் பள்ளிகள் 229, மேல்நிலைப் பள்ளியில் 221 என மொத்தம் 777 பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலகங்களில் (இடைநிலை) இருந்தும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி) மூலமும், பள்ளிகளுக்கு பாடப் புத்தங்கள் மற்றும் சீருடைகள் அனுப்பி வைக்கப்பட்டு, பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே அனைத்து மாணவா்களுக்கும் வழங்குவதற்கு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவா்களை பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், ஆசிரியா்கள் அனைவரும் வரவேற்கத் தயாராகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com