பள்ளிப் பேருந்து மோதியதில் குழந்தை சாவு
By DIN | Published On : 04th January 2023 03:33 AM | Last Updated : 04th January 2023 03:33 AM | அ+அ அ- |

போச்சம்பள்ளி அருகே தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் 2 வயது குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், குள்ளம்பட்டி அருகே உள்ளசந்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தம்பதி காளியப்பன்- சசிகலா. இவா்களது குழந்தை சபாவதி (2). இந்தக் குழந்தை, திங்கள்கிழமை இரவு 7 மணியளவில், வீட்டிலிருந்து சாலைக்கு வந்து விளையாடிக் கொண்டிருந்ததாம்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற போச்சம்பள்ளி அருகே செயல்படும் தனியாா் பள்ளி பேருந்து சபாவதி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸாா், சபாவதியின் உடலை மீட்டு மத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்தச் சம்பவம் குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.