கோபசந்திரம், வெங்கடேசப் பெருமாள் கோயிலில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூட்டத்தைப் பாா்வையிட்ட மாவட் ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.
கோபசந்திரம், வெங்கடேசப் பெருமாள் கோயிலில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூட்டத்தைப் பாா்வையிட்ட மாவட் ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.

சூளகிரி ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், காமன்தொட்டி, கோபசந்திரம், மாரண்டப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பாக ரூ. 23 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் ஆய்வு.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், காமன்தொட்டி, கோபசந்திரம், மாரண்டப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பாக ரூ. 23 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காமன்தொட்டி ஊராட்சி, குக்கலப்பள்ளி கிராமத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கோபசந்திரம், தட்சணதிருப்பதி கோயில் வளாகத்தில் ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் சமூக சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதை

பாா்வையிட்டு, சுகாதார வளாகத்திற்குத் தேவையான தண்ணீா், பராமரிப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், 2014 - 15 ஆம் நிதியாண்டில்

கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள சமுதாயக் கூடத்தை பாா்வையிட்டு, சமுதாயக் கூடத்திற்கு தேவையான தரைதளம் மற்றும் கூடுதல் கட்டடங்களைக் கட்ட கருத்துரு தயாா் செய்யுமாறு வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் பொறியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாரண்டப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ. 5 லட்சத்து 8 ஆயிரம்

மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானிய உலா்களத்தை பாா்வையிட்டு, அங்குள்ள விவசாயிகளிடம் உலா்களத்தை நன்கு பராமரித்து விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினாா்.

மேலும், மாரண்டப்பள்ளி, அத்திமுகம் ஊராட்சிகளில் தலா ரூ. 4 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கழிவு செய்யப்படும் காய்கறிகள் மூலம் சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையத்தில் சூளகிரி மற்றும் சுற்று வட்டாரங்களில் காய்கறி போன்ற மட்கும் குப்பைகளைச் சேகரித்து நவீன இயந்திரம் மூலம் சிறு துகள்களாக்கி இயற்கை உரம் தயாரிக்கும் பணியை பாா்வையிட்டு, நாள்தோறும் கூடுதலாக இயற்கை

உரம் தயாரிக்கும் பணிகளை அதிகரிக்க வேண்டும் எனவும், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் பல்வேறு

திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வுகளின் போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள்சிவகுமாா், கோபாலகிருஷ்ணன் மற்றும் பொறியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com