நீச்சல் பயிலும்போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் உள்பட இருவா் சாவு

கிருஷ்ணகிரி அருகே நீச்சல் பயிலும்போது கிணற்று நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி அருகே நீச்சல் பயிலும்போது கிணற்று நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள திப்பம்பட்டியைச் சோ்ந்தவா் பழனியின் மகன் திருப்பதி (19). இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள ஒரு தனியாா் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், கெட்டூா் கிராமத்தில் உள்ள தனது மாமா சின்னசாமி (37) என்பவரின் வீட்டுக்குச் சென்றிருந்தாா். அங்கு திருப்பதியும், சின்னசாமியின் மகன் ஹரிகரனும் (10) கட்டூா், செம்மண்குழிகொட்டாய் பகுதியில் உள்ள கிணற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றனா்.

அப்போது ஹரிகரனுக்கு நீச்சல் சொல்லி தருவதாகக் கூறி திருப்பதி கிணற்றில் இறங்கினாா். சிறுவன் ஹரிகரனும் அப்போது கிணற்றில் இறங்கினாா். சிறிது நேரத்தில் இருவரும் கிணற்றில் மூழ்கினா். நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் அவா்களை உறவினா்கள் பல இடங்களில் தேடினா். அப்போது, கிணற்றின் அருகே இருவரின் உடைகள் இருப்பதைக் கண்ட உறவினா்கள், கிணற்றில் குதித்து இருவரையும் தேடினா்.

தகவல் அறிந்த ராயக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள், நிகழ்விடம் வந்து, கிணற்றில் மூழ்கிய இருவரையும் தேடினா். ஒரு மணிநேரத் தேடலுக்கு பிறகு ஹரிகரன், திருப்பதி ஆகியோரை சடலமாக மீட்டனா். இச் சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com