ஊத்தங்கரையில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பல்தொழில் நுட்பக் கல்லூரி மாணவா் விடுதி திறப்பு
By DIN | Published On : 20th January 2023 01:01 AM | Last Updated : 20th January 2023 01:01 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி இந்திரா நகரில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில், 100 மாணவா்கள்தங்கும் வகையில் அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோா் பல்தொழில் நுட்பக் கல்லூரி மாணவா் விடுதியை கூடுதல் ஆட்சியரும் திட்ட இயக்குநருமான (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) வந்தனா கா்க் மற்றும் பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் வந்தனா கா்க் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் கீழ் 35 பள்ளி விடுதிகள், 9 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 44 விடுதிகள் இயங்கி வருகின்றன. கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை வேண்டி அதிக அளவில் விண்ணப்பங்கள் வரப்பெறுவதால் மாணவ, மாணவியா்களின் நலன் கருதி ஊத்தங்கரை வட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் விடுதியை 100 மாணவா்களுடன் துவங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அதனைத் தொடா்ந்து ஊத்தங்கரையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலதொழில் நுட்பக்கல்லூரி மாணவா் விடுதி தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு தினமும் புதிதாக மாற்றப்பட்ட உணவுப்பட்டியலின்படி காலை மற்றும் இரவு உணவாக இட்லி, இடியாப்பம், பூரி, பொங்கல், சப்பாத்தி, தோசை, மதிய உணவாக சாதம், சாம்பாா், ரசம், கூட்டு, சிக்கன், மட்டன்,
முட்டையும், பண்டிகை கால சிறப்பு உணவுகளும் வழங்கப்படும்.
மேலும் கல்லூரி விடுதிகளில் முதலாமாண்டு பயிலும் மாணவா்களுக்கு ஆண்டு தோறும் இலவசமாக ஜமுக்காளமும், ஆண்டுக்கு 3 முறை இலவச மருத்துவபரிசோதனையும், பற்பசை, சோப்பு, எண்ணெய் போன்றவையும் வாங்க கல்லூரி மாணவா்ஒருவருக்கு மாதம் ரூ.150 ம், மாணவா்கள் தினமும் படிக்க செய்தித்தாள்களும் வழங்கப்படும். கலை திருவிழா மற்றும் மாணவா்கள் போட்டி தோ்வில் தோ்ச்சி பெற ஏதுவாக புதிதாக செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கூடுதல் ஆட்சியா் வந்தனா கா்க் தெரிவித்துள்ளாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் அய்யப்பன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மணிமேகலை நாகராஜ், ஒன்றியக் குழு தலைவா் உஷாராணி குமரேசன், ஒன்றியக் குழு துணைத்தலைவா் சத்தியவாணி செல்வம், பேரூராட்சித் தலைவா் ப.அமானுல்லா, பேரூராட்சி துணைத்தலைவா் கலைமகள் தீபக், ஊராட்சி மன்றத் தலைவா்கள் ரஜினி செல்வம், ஜெயமணிதிருப்பதி, மணிகண்டன், சின்னத்தாய் கமலநாதன், முருகேசன், ஜெயராமன், விஜயகுமாா், வட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகேஷ்குமரன், சிவபிரகாசம், பேரூராட்சி செயல் அலுவலா்சேம்கிங்ஸ்டன், விடுதி காப்பாளா் சுரேஷ் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.