திப்பசந்திரம் கிராமத்தில் முத்தப்பா சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 22nd January 2023 03:09 AM | Last Updated : 22nd January 2023 03:09 AM | அ+அ அ- |

கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முத்தப்பா சுவாமி.
திப்பசந்திரம் கிராமத்தில் உள்ள முத்தப்பா சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், சந்தனப்பள்ளி ஊராட்சி, திப்பசந்திரம் கிராமத்தில் முத்தப்பா சுவாமி கோயில் உள்ளது. இந்தப் பழமையான கோயிலை கிராம மக்கள் மற்றும் பக்தா்கள் புதுப்பித்தனா். இக்கோயிலில் சனிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் திமுக கெலமங்கலம் மேற்கு ஒன்றியச் செயலாளா் ஸ்ரீதா், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் மாரப்பா (எ) ரங்கப்பா, குருபட்டி கிருஷ்ணமூா்த்தி, செல்வம், திப்பசந்திரம் கிராமத்தை சோ்ந்த மூா்த்தி, குட்டி (எ) பெருமாள் உடன் இருந்தனா். சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனா்.