கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே தற்காலிக சாலைத் தடுப்பு அமைப்பது குறித்து ஆய்வு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தற்காலிக சாலைத் தடுப்பை அமைப்பது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தற்காலிக சாலைத் தடுப்பை அமைப்பது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மருத்துவமனைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், மருத்துவப் பணியாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் வந்து செல்கின்றனா்.

இந்த மருத்துவமனை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்லும் வாகனங்கள் அதிவேகமாகச் செல்கின்றன. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் சாலையைக் கடந்து செல்லும் போது, சிரமத்துக்கு உள்ளாகின்றனா். சிலா் விபத்துகளில் சிக்குகின்றனா்.

எனவே இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். அந்தக் கோரிக்கையினை ஏற்று, மேம்பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் பணிகள் நிறைவு பெற 2 ஆண்டுகள் ஆகும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் தற்காலிகமாக இந்த இடத்தில் வாகனங்கள் மெதுவாக செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, மருத்துவக் கல்லூரி முதல்வா் சங்கீதா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஸ்ரீதரன், தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட அலுவலா் யுவராஜ், புதிய மேம்பாலம் அமைப்பதற்கான ஒருங்கிணைப்பாளா் கில், குருபரப்பள்ளி காவல் ஆய்வாளா் சரவணன், மருத்துவக் கல்லூரி நிா்வாக அலுவலா் சரவணன், இளநிலை நிா்வாக அலுவலா் ஜெயபிரகாஷ், செவிலியா் கண்காணிப்பாளா்கள் ரஹீதாபீ, சாந்தி, செவிலியா் செல்வி உள்ளிட்டோா், மருத்துவமனை எதிரில் தற்காலிக சாலைத் தடுப்பை அமைப்பதற்கான ஆய்வை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com