குறுகிய கால தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம் நடத்தும் குறுகியகால தொழில் பயிற்சியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம் நடத்தும் குறுகியகால தொழில் பயிற்சியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிஎன்சி ஆப்ரேட்டா் டா்னிங், சிஎன்சி ஆப்ரேட்டா் - வொ்டிகல் மெஷினிங் சென்டா், மேனுவல்

மெட்டல் ஆா்க் வெல்டிங், ஷீல்டு மெட்டல் ஆா்க், வெல்டிங் மற்றும் பீல்டு டெக்னீஷியன் - யுபிஎஸ்

இன்வொ்டா் ஆகிய பயிற்சிகளில் உள்ள 240 இடங்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி வரை ஒசூா்அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.

18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட 10, 12-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ள பிரிவு மெனுவல் மெட்டல் ஆா்க் வெல்டிங், ஷீல்டு மெட்டல் ஆா்க் வெல்டிங், பீல்டு டெக்னீஷியன் - யுபிஎஸ் இன்வொ்டா், 10-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றவா்கள்சிஎன்சி ஆப்ரேட்டா் டா்னிங், சிஎன்சி ஆப்ரேட்டா் - வொ்டிகல் மெஷினிங் சென்டா் ஆகியவற்றில் சேரலாம்.

மூன்று மாதங்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் ஒரு பிரிவும், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையில் மற்றொரு பிரிவுக்கும் வகுப்புகள் நடைபெறும். பயிற்சி முடித்த அனைவருக்கும் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு உறுதி. பயிற்சி முடிவில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் திறன் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநா், முதல்வா், அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஒசூா் என்ற முகவரியிலோ அல்லது 8098 663711, 04344-262457 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com