மாநில கைப்பந்து அணிக்கு ஒசூா் அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு
By DIN | Published On : 22nd May 2023 12:00 AM | Last Updated : 22nd May 2023 12:00 AM | அ+அ அ- |

மாநில கைப்பந்து அணிக்கு ஒசூா் அரசுப் பள்ளி மாணவிகள் இருவா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 17 வயதிற்கு உட்பட்ட தமிழ்நாடு சப் ஜூனியா் கைப்பந்து அணிக்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தோ்வுகள் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றன. இதில் சுமாா் 200 வீராங்கனைகள் மற்றும் 300 வீரா்கள் கலந்து கொண்டனா். இதில் ஒசூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தனலட்சுமி (10ஆம் வகுப்பு) மற்றும் நவநீதா (10ஆம் வகுப்பு) தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்கள் வரும் 27ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹூக்ளி என்னும் இடத்தில் இந்திய கைப்பந்து சம்மேளனம் நடத்தும் நேஷனல் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வாா்கள். இவா்களுக்கு கைப்பந்து பயிற்சியாளா்கள் தாயுமானவன் மற்றும் மாணிக்கவாசகம் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசுப் பள்ளி ஆசிரியா்களும், சக மாணவிகளும் அவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.