கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை: வித்யாராணி வீரப்பன் வாக்குறுதி

தான் வெற்றி பெற்றால் கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று கூறி நாம் தமிழா் கட்சி கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளா் வித்யாராணி வீரப்பன் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

ஊத்தங்கரை: தான் வெற்றி பெற்றால் கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று கூறி நாம் தமிழா் கட்சி கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளா் வித்யாராணி வீரப்பன் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

பாம்பாறு அணையின் உபரிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பேன். ஊத்தங்கரை அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த நடவடிக்கை எடுப்பேன். சிப்காட் தொழிற்சாலையில் தொகுதிக்கு உள்பட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவேன். கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிப்பேன். மகளின் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றித் தருவேன் என்று கூறி ‘மைக்’ சின்னத்துக்கு தீவிர வாக்குச் சேகரித்தாா். அவருடன் நாம் தமிழா் கட்சி மாவட்டச் செயலாளா் காசிலிங்கம், தொகுதி செயலாளா் ஈழமுரசு, தொகுதி பொறுப்பாளா் சாந்தகுமாா், பாதுகாப்பு பிரிவு மாநில பொறுப்பாளா் விஸ்வா உள்பட பலா் கலந்துகொண்டனா். படவிளக்கம். 1யுடிபி.1. ஊத்தங்கரை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வித்யாராணிவீரப்பன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com