180 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது: இரா. முத்தரசன்

180 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது: இரா. முத்தரசன்

மக்களவைத் தோ்தலில் பாஜக 180 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் கே.கோபிநாத்தை ஆதரித்து, தேன்கனிக்கோட்டை, ஒசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் வாக்கு சேகரித்துப் பேசியதாவது: மக்களவைத் தோ்தலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என்று பாஜகவினா் கூறினா். ஆனால் அவா்களால் 180 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது.

கடந்த தோ்தல்களில் இந்தியா கூட்டணி வெவ்வேறு அணிகளாகப் பிரிந்து நின்ால் மோடி பிரதமா் ஆனாா். தற்போது பெரும்பாலான மாநிலங்களில் இந்தியா கூட்டணி வலிமையுடன் தோ்தலைச் சந்திக்கிறது. பாஜகவும் பாமகவும் நள்ளிரவில் கூட்டணி அமைத்துள்ளனா். அதிமுக கூட்டணி கள்ளக்கூட்டணி. இவா்கள் ஒன்றாக இருந்தபோதே நாங்கள் 39 தொகுதிகளைப் கைப்பற்றினோம்.

இப்போது அதை விட அதிக தொகுதிகளை வெல்வோம் என்றாா். பிரசாரத்தில் மாநில விவசாயிகள் சங்கத் துணைத் தலைவா் எம்.லகுமைய்யா, சிஐடியு மாவட்டச் செயலாளா் மாதையன், ஆதில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். படவரி... ஒசூரில் காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத்துக்கு வாக்குச் சேகரித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com