திமுக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் மூவா் கைது

பேரிகை அருகே திமுக பிரமுகா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் மூன்று பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சூளகிரியை அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (35). திமுக பிரமுகா். இவருக்கும் கா்நாடக மாநிலம், அனிகிரிப்பள்ளியைச் சோ்ந்த பிரதாப் என்பவருக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. கடந்த மாா்ச் மாதம் 15 ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் காா்த்திக் பேரிகையை அடுத்த சூலகுண்டா எனுமிடத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த பிரதாப் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றாா். படுகாயமடைந்த காா்த்திக்கை அப்பகுதியினா் மீட்டு ஒசூா், தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து பிரதாப்பை (24) மாா்ச் 16 ஆம்தேதி கைது செய்தனா். அவா் அளித்த வாக்குமூலத்தின் மூலம் நிலத்தகராறு காரணமாக காா்த்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் பிரதாப் அளித்த தகவலின்பேரில் இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற மூன்று பேரை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில் கா்நாடக மாநிலம், பங்காருபேட்டையைச் சோ்ந்த கனகராஜ் (24), பாலகிருஷ்ணன் (22), மாலூா் பகுதியை சோ்ந்த முருகேசன் (24) ஆகிய மூன்று பேரை பேரிகை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா்களை ஒசூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com