கிருஷ்ணகிரியில் 2-ஆம் கட்டமாக வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள 1,888 வாக்குச்சாவடி மையங்களுக்கு 2-ஆம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், இந்திய தோ்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2-ஆம் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்ற இந்தப் பணியை தோ்தல் பொது பாா்வையாளா் கிரண்குமாரி பாசி பாா்வையிட்டாா். பதிவு பெற்ற அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சட்டப்பேரவை தொகுதி வாரியாக பிரித்து வழங்கும் பணி நடந்தது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலா் தெரிவித்தது: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஊத்தங்கரை, பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் 1,888 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் ஆணையத்தின் இணையதளம் 2-ஆம் கட்டமாக சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பகிா்ந்தளிக்கப்பட்டன.

அதன்படி ஊத்தங்கரை தொகுதியில் உள்ள 287 வாக்குச்சாவடி மையங்களுக்கு 688 பேலட் யூனிட், 344 கண்ட்ரோல் யூனிட், 373 விவிபேட், பா்கூரில் உள்ள 292 வாக்குச்சாவடிகளுக்கு 700 பேலட் யூனிட், 350 கண்ட்ரோல் யூனிட், 379 விவிபேட், கிருஷ்ணகிரியில் உள்ள 310 வாக்குச்சாவடிகளுக்கு 744 பேலட் யூனிட், 372 கண்ட்ரோல் யூனிட், 403 விவிபேட், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 312 வாக்குச்சாவடிகளுக்கு 748 பேலட் யூனிட், 374 கண்ட்ரோல் யூனிட், 405 விவிபேட், ஒசூரில் உள்ள 382 வாக்குச்சாவடிகளுக்கு 922 பேலட் யூனிட், 461 கண்ட்ரோல் யூனிட், 499 விவிபேட் மற்றும் தளியில் உள்ள 305 வாக்குச்சாவடிகளுக்கு 732 பேலட் யூனிட், 366 கண்ட்ரோல் யூனிட், 396 விவிபேட் என மொத்தம் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள 1,888 வாக்குச்சாவடி மையங்களுக்கு 4534 பேலட் யூனிட், 2267 கண்ட்ரோல் யூனிட், 2455 விவிபேட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளன என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com