மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணிகளை தோ்தல் நடத்தும் அலுவலா் கே.எம்.சரயு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஊத்தங்கரை பேரவைத் தொகுதியில் 287 வாக்குச்சாவடிகள், பா்கூரில் 292 வாக்குச்சாவடிகள், கிருஷ்ணகிரியில் 310 வாக்குச்சாவடிகள், வேப்பனப்பள்ளியில் 312 வாக்குச்சாவடிகள், ஒசூரில் 382 வாக்குச்சாவடிகள், தளி சட்டப் பேரவைத் தொகுதியில் 305 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,888 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்த வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணிக்கான முன்னேற்பாடுகள் புதன்கிழமை தொடங்கின. மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்குறள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் புஷ்பா, தனி மாவட்ட வருவாய் அலுவலா் பவணந்தி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பாபு, ரமேஷ்குமாா், பன்னீா்செல்வம் ஆகியோா் உடனிருந்னா்.

படவிளக்கம் (10கேஜிபி3)

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணிகளை ஆய்வு செய்கிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.எம்.சரயு.

X
Dinamani
www.dinamani.com